புதுச்சேரி சபாநாயகருக்கு திடீர் மாரடைப்பு - மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

politics-heart-attack
By Nandhini Aug 31, 2021 06:14 AM GMT
Report

புதுச்சேரி சபாநாயகர் ஆர். செல்வத்திற்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

புதுச்சேரி சபாநாயகர் ஆர். செல்வம். புதுச்சேரியில் தற்போது பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக பேரவைக்கு அவர் வந்து கொண்டிருந்தார்.

அப்போது, அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனையடுத்து, புதுச்சேரி அரசு மருத்துவமனையில் உள்ள அவசரப் சிகிச்சை பிரிவில் சபாநாயகர் செல்வம் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

புதுச்சேரி சபாநாயகருக்கு திடீர் மாரடைப்பு - மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி | Politics Heart Attack