‘’என் உயிருள்ளவரை அரசியலில் இருப்பேன்'’: கமல் ஹாசன்
என் உயிருள்ளவரை அரசியலில் இருப்பேன், அரசியல் இருக்கும் வரை மக்கள் நீதி மய்யம் இருக்கும் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின் தோல்விக்கு பிறகு, மக்கள் நீதி மய்யத்தின் பொதுச் செயலாளர், துணைத் தலைவர் உள்பட பல முக்கிய பிரமுகர்கள் கட்சியிலிருந்து விலகினர்.
[
இந்த நிலையில் கமல்ஹாசன் தனது ட்வீட்டர் பதிவில் விடியோ ஒன்றைப் வெளியிட்டுள்ளார்.
அதில், பொய்க் குற்றச்சாட்டுகளை சுமத்துபவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.
அவர்களுக்கு காலம் பதில் சொல்லும். தோல்வியை ஆராய்ந்து அதில் வெற்றிப் பாடம் கற்பது நாம் கண்ட சரித்திரம்.
கூட்டணி வைத்துக் கொள்வதில் நாம் காட்டிய வெளிப்படைத்தன்மை அனைவரும் அறிந்ததே என தெரிவித்துள்ள கமல்ஹாசன்.
உயிருள்ளவரை அரசியலில் இருப்பேன். அரசியல் இருக்கும் வரை மக்கள் நீதி மய்யம் இருக்கும் என தெரிவித்துள்ளார்.
ஆக இனி மய்யத்தில் அடுத்து முக்கிய பொறுப்பிற்கு வரப் போவது யார்? அதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.