காங்கிரஸ் மூத்த தலைவர் ஜி.எஸ்.பாலி உயிரிழந்தார்
காங்கிரஸ் மூத்த தலைவர் ஜி.எஸ்.பாலி உடல்நல குறைவால் உயிரிழந்தார். அவருக்கு வயது 67. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜி.எஸ்.பாலி அவர்கள் நீண்ட நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.
இதனையடுத்து, அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து அவரது மகன் ரகுபீர் சிங் பாலி டுவிட்டரில் பக்கத்தில், தனது அன்புக்குரிய தந்தை மற்றும் உங்கள் அனைவருக்கும் அன்பான ஜி.எஸ்.பாலி நம்முடன் இல்லை என கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
இவரது மறைவிற்கு காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.