என்னது ஒலிம்பிக்கில் அரசியல் பேசலாமா? வெளியான பரபரப்பு செய்தி!
டோக்கியோ ஒலிம்பிக்கில் விளையாட்டு நட்சத்திரங்கள் தங்கள் மனதில் பட்ட அரசியல் கருத்துக்களை தெரிவிக்க அனுமதி தரப்பட்டது.
பொதுவாக உலக நாடுகள் பங்கேற்கும் விளையாட்டில் அரசியல் அனுமதிக்கப்படாது.
சில சமயங்களில் வீரர், வீராங்கனைகள் புதிய முறைகளில் தங்கள் எதிர்ப்பை காண்பிப்பர்
இந்த நிலையில் தற்போது டோக்கியோ ஒலிம்பிக்கில் விளையாட்டு நட்சத்திரங்கள் தங்கள் எதிர்ப்புகளை தெரிவிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
மேலும் போட்டி துவங்கும் முன்பும் முடிந்த பிறகு தங்கள் அரசியல் கருத்துக்களை தெரிவிக்கலாம்.
மைதானத்தில் முழங்காலிட்டு இனவெறிக்கு எதிர்ப்பு தெரிவிக்க, சமூக வலைதளத்தில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க, எதிர்ப்பு கோஷங்கள் அடங்கிய ஆடைகளை அணிந்து பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்க அனுமதி தரப்படுகிறது.
அதே சமயம் இந்த கருத்துக்கள் எந்த ஒரு நபர், நாட்டினை நேரடியாக தாக்கும் வகையில் இருக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
{{ஆதாரம் :https://www.nytimes.com/2021/07/02/sports/olympics/olympics-protests-tokyo.html}}