இலவச நாப்கின் - ஆந்திராவில் தொடங்கி வைத்தார் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி!
ஆந்திர மாநிலத்தின் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பெண்களுக்கு இலவச நாப்கின் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.
ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. தற்போது ஆந்திர மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளி, கல்லூரிகளில் படிக்கக்கூடிய மாணவிகளுக்கு இலவச சானிடரி நாப்கின் வழங்கும் திட்டத்தை நேற்று முதல்வர் அலுவலகத்தில் தொடங்கி வைத்துள்ளார்.
பெண்களின் சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு இந்த திட்டத்தை அறிமுகப்படுத்த இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் சுமார் 10 லட்சம் பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் பத்து சானிடரி நாப்கின்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மாதவிடாய் காலத்தில் மாணவிகள் பள்ளிக்கு விடுப்பு எடுப்பதை குறைக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்களின் சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதற்காகவும் இந்த திட்டத்தை அமல்படுத்தி இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.
10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 2 மாதங்களுக்கு ஒருமுறை நாப்கின்கள் வழங்கப்பட இருக்கிறது.
