தமிழ்நாட்டில் 2 தீய சக்திகள் உள்ளன... ஒன்று திமுக, மற்றொன்று சசிகலா – ஜெயக்குமார் விமர்சனம்

politics
By Nandhini Oct 15, 2021 09:07 AM GMT
Report

சசிகலாவால் அதிமுகவில் பிளவை ஏற்படுத்த முடியவே முடியாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது -

உள்ளாட்சித் தேர்தலில் எங்களுக்கு பின்னடைவு கிடையாது. தேர்தல் நேர்மையாக, ஜனநாயக முறையில் நடைபெற்று இருந்தால் வெற்றி, தோல்வி சமமாக இருக்கும்.

ஜெயலலிதா நினைவிடத்திற்கு சசிகலா செல்வது வீணான முயற்சி. அவரால் அதிமுகவில் எவ்வித பிளவையும் ஏற்படுத்த முடியவே முடியாது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை தான் அம்மா என்று மக்கள் முழு மனதோடு ஏற்றுக் கொண்டார்கள். நானும் அம்மா தான் என்று சொல்லிக்கிட்டு வந்தால், அதை மற்றவர்கள் பார்த்து கேலியாகத்தான் சிரிப்பார்கள்.

அப்படிப்பட்ட நிலைமை தான் ஏற்படும். எனவே, அம்மா.. அம்மா தான், மத்ததெல்லாம் சும்மா தான். அதிமுக தொண்டர்கள் ஒற்றுமையை எந்த தீய சக்தியாலும் சீர்க்குலைக்கவே முடியாது. சசிகலாவால் எந்தவித பாதிப்பும் அதிமுகவுக்கு ஏற்படாது.

யார் எங்க போனாலும் எங்களுக்கு எந்த கவலையும் கிடையாது. தமிழ்நாட்டில் 2 தீய சக்திகள் இருக்கின்றன. ஒன்று திமுக, மற்றொன்று சசிகலா மற்றும் அவரை சார்ந்தவர்கள்.

இவ்வாறு அவர் கூறினார். 

தமிழ்நாட்டில் 2 தீய சக்திகள் உள்ளன... ஒன்று திமுக, மற்றொன்று சசிகலா – ஜெயக்குமார் விமர்சனம் | Politics