‘வடிவேலு இல்லாத நாட்களில் நமக்கு பொழுதுபோக்கு அண்ணாமலைதான்’ – கிண்டலடித்த எம்.பி. மாணிக்கம் தாகூர்!
அண்ணாமலையின் பேச்சை யாரும் சீரியஸாகவே எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று விருதுநகர் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில், சிவகாசியில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலை. அப்போது அவர் பேசியதாவது - விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தமிழக அரசு அனுமதி கொடுக்காமல் பிடிவாதமாக இருந்து வருகிறது.
அதனால் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை 3 நாட்கள் மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் விநாயகர் சிலைகளை வீடுகள் முன் வைத்து தொண்டர்கள் வழிபாடு செய்வார்கள். அதிமுகவுடன் எந்த பிரச்சனையும் இல்லாமல் கூட்டணி சென்றுக் கொண்டிருக்கிறது.
வருகின்ற காலம் பாஜகவின் காலம். இதுவே திமுகவின் கடைசி ஆட்சிக்காலம். இனிமேல் தமிழ்நாட்டில் திராவிடத்திற்கு இடம் கிடையாது. வேலையும் கிடையாது. இவ்வாறு அவர் பேசினார்.
இதனையடுத்து, விருதுநகர் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் அளித்த பேட்டியில் பேசுகையில், “தமிழ்நாட்டில் 5 ஆண்டுகளில் திராவிட ஆட்சி முடிவுக்கு வரும் என்று கணக்கு போடும் பாஜகதான் விரைவில் முடிவு வரப்போகிறது.
அண்ணாமலையின் கனவு கனவாகவே இருக்கும். வடிவேலு இல்லாத நாட்களில் நமக்கு, கடந்த 2 வருடமாக ஒரு பொழுது போக்கு அண்ணாமலை மட்டும்தான். அந்த அளவிற்கு நல்லா காமெடி செய்வார். அதனால் அண்ணாமலையின் பேச்சை சீரியஸாக யாரும் எடுத்துக்கொள்ள வேண்டாம். என்றார்.
