‘விநாயகர் சதுர்த்தி உதயநிதிக்கு வெறும் மண் பொம்மையாக இருக்கலாம், ஆனால் அது இந்துக்களின் உணர்வு’ - காயத்ரி ரகுராம் விளாசல்!

politics-
By Nandhini Sep 03, 2021 07:39 AM GMT
Report

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா வரும் செப்டம்பர் 10ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. விநாயகக் கடவுளின் சிலையை ஒவ்வொரு தெருக்களிலும் பிரதிஷ்டை செய்து, 3 நாட்கள் வழிபாட்டுக்கு பிறகு, ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, நீர்நிலைகளில் கரைக்கப்படுவது இந்து மக்களின் வழக்கம்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக, பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட தமிழக அரசு தடை விதித்துள்ளது. அதாவது, விநாயகர்‌ சதுர்த்தியையொட்டி பொது இடங்களில்‌ சிலைகளை பிரதிஷ்டை செய்ய தடை விதிக்கப்படுவதாகவும், விநாயகர் சிலைகள் ஊர்வலம், நீர்நிலைகளில்‌ சிலைகளைக்‌ கரைப்பதற்கும்‌ அனுமதி மறுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

விநாயகர்‌ சதுர்த்தியை தனி நபர்களாக தங்களது இல்லங்களில்‌ விநாயகர்‌ சிலைகளை வைத்து வழிபடவும்‌, தனி நபர்களாகச்‌ சென்று அருகிலுள்ள நீர்நிலைகளில்‌ கரைக்கவும் அனுமதியளிக்கப்படுவதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், விநாயகர் சதுர்த்திக்கு தடை விதித்த தமிழக அரசுக்கு பாஜக பிரமுகர் காயத்ரி ரகுராம் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், ‘விநாயகர் சதுர்த்தி உதயநிதிக்கு வெறும் ஒரு மண் பொம்மையாக இருக்கலாம், ஆனால் ஒவ்வொரு இந்துகளும் நம்பும் கலாச்சாரம் பண்பாடு உணர்வு ஒற்றுமையுடன் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை கொண்டாடுகிறோம். தி.மு.க கோடிக்கணக்கான தமிழ் மக்களை காயப்படுத்த தீய கொள்கையை மக்களிடம் திணிக்கிறது’ என பதிவிட்டதுடன், #DMKFails என்ற ஹேஷ்டேக்கையும் குறிப்பிட்டிருக்கிறார்.