ஆந்திர அரசியலில் அதிரடியாக நடிகை ரோஜா பதவி நீக்கம் – காரணம் இதுதானாம்!
ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. நகரி தொகுதியில் போட்டியிட்டு வென்ற ரோஜாவுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட உள்ளதாக பேச்சு நிலவி வந்தது.
ஆனால் அந்த வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை. ஆனால், ரோஜாவுக்கு முக்கிய பதவி வழங்க வேண்டும் என்ற பேச்சு எழுந்து வந்தது. இதனையடுத்து, தொழில்துறை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழக தலைவர் பதவி ரோஜாவுக்கு வழங்கப்பட்டது.
தற்போது அந்த பதவியிலிருந்து ரோஜா நீக்கப்பட்டிருக்கிறார். அந்த பதவிக்கு புதிய தலைவராக மேட்டு கோவிந்த ரெட்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ரோஜா மீது குவிந்த புகார்கள்தான் இதற்கு காரணம் என்கிறது கட்சி தலைமையிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. புத்தூர், நகரி நகராட்சி தேர்தல்களில் கட்சி வேட்பாளர்களை எதிர்த்து பலர் களம் இறங்கியிருக்கிறார்கள்.
ரோஜாவின் நடவடிக்கைகளினால்தான் வேட்பாளருக்கு எதிராக பலர் இறங்கியிருக்கிறார்கள் என்று புகார்கள் குவிந்ததால், உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, ரோஜா பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.
