கீழ் நடுத்தர மக்கள் ஏழையாக மாறிக்கொண்டிருக்கிறார்கள் - ப. சிதம்பரம்

politics
By Nandhini Jun 06, 2021 05:52 AM GMT
Report

கீழ் நடுத்தர மக்கள் ஏழையாகின்றனர் என முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் டிவிட்டரில் தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவில் கொரோனா 2ம் அலை அதிகமாக பரவி வந்த நிலையில், தற்போது முழு ஊரடங்கால் கொரோனா பாதிப்பு தற்போது குறைந்து வருகிறது.

இது குறித்து, மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு 2,88,09,339 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா 2-வது அலை காரணமாக இந்தியா பல்வேறு பொருளாதார சிக்கல்களை எதிர் கொண்டுள்ளது என்று அந்த அறிக்கையில் வெளியிட்டுள்ளது.

இதனையடுத்து, முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் டிவிட்டரில், கொரோனா காரணமாக கீழ் நடுத்தர மக்கள் ஏழையாக மாறிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களை விட வறுமையில் உள்ள ஏழை வர்க்கத்திற்கு மோடி அரசு என்ன செய்திருக்கிறது? 23 கோடி மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழே தள்ளப்பட்டதற்கு அரசின் இயலாமையும், தவறான கொள்கைகளுமே காரணம்'' என பதிவிட்டுள்ளார். 

கீழ் நடுத்தர மக்கள் ஏழையாக மாறிக்கொண்டிருக்கிறார்கள் - ப. சிதம்பரம் | Politics