டெல்லியில் 43-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் - நிர்மலா சீதாராமன் தலைமையில் நாளை கூடுகிறது!

politics
By Nandhini May 27, 2021 07:36 AM GMT
Report

டெல்லியில், 43-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நாளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற உள்ளது. இக்கூட்டத்தில் தமிழகம் சார்பில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்க உள்ளார்.

வீடியோ கான்பரன்ஸ் மூலமாக இக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் நிதித் துறை இணையமைச்சர் அனுராக் தாகூர், அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதியமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

கொரோனா 2வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இந்த சூழலில், இக்கூட்டம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், ஜிஎஸ்டி வரியின் கீழ் பெட்ரோலிய பொருட்களை சேர்ப்பது போன்ற பல நிலுவையில் உள்ள சிக்கல்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.

கொரோனா தடுப்பூசிகளுக்கு விதிக்கப்படும் 5 சதவீத ஜிஎஸ்டி மற்றும் மருந்துகள், ஆக்சிஜன் உள்ளிட்டவற்றிற்கு வரிவிலக்கு அளிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை மாநில அரசுகள் முன்வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

டெல்லியில் 43-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் - நிர்மலா சீதாராமன் தலைமையில் நாளை கூடுகிறது! | Politics