வெளிநாட்டு உதவிகளைப் பெற்று மத்திய அரசு தனது செயலுக்கு மார்தட்டிக் கொள்கிறது - ராகுல்காந்தி

politics
By Nandhini May 10, 2021 12:06 PM GMT
Report

உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் 2ம் அலை அதிவேகமாக பரவி வருகிறது. ஒரே நாளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தைத் தாண்டி உள்ளது.

பெரும்பான்மையான நாடுகளில் கொரோனா பரவல் குறைந்துள்ளது. ஆனால், இந்தியாவில் நிலைமைதான் மிகவும் மோசமாகிக் கொண்டே வருகிறது. இவை எல்லாவற்றிற்கும் பிரதமர் மோடி அரசின் தவறான கொள்கைதான் காரணம் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் ராகுல்காந்தி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க வெளிநாடுகளிலிருந்து உதவிகளைப் பெற்றுக்கொண்டு மத்திய அரசு தொடந்து தனது செயல்களுக்கு மார்தட்டிக் கொண்டு பெருமை கொள்கிறது. மத்திய அரசு தனது கடமைகளை, பணிகளை முறையாகச் செயத்திருந்தால், இந்தியாவுக்கு இந்த நிலையே வந்திருக்காது என்று பதிவிட்டுள்ளார்.