பொன்.ராதாகிருஷ்ணன் மருத்துவமனையில் திடீர் அனுமதி!
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் 2ம் அலை அதிகமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மத்திய முன்னாள் அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, அவர் நேற்று இரவு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கன்னியாகுமரி மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்தை எதிர்த்து பாஜக சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிட்டார். இதனையடுத்து, கடந்த 2ம் தேதி மக்களவை தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகின. இதில், 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ராதாகிருஷ்ணன் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.