மு.க.ஸ்டாலினுக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்த சீமான்
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற்று முடிந்தது. அதனையடுத்து, தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 2ம் தேதி நடந்தது. அப்போது திமுக 159 தொகுதிகளை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இதனையடுத்து வரும் 7ம் தேதி திமுக தலைவர் தமிழக முதல்வராக பதவியேற்க இருக்கிறார்.
இந்நிலையில், ஸ்டாலினுக்கு நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் டுவிட்டர் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்து செய்தியில், “தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று நாளை ஆட்சியமைக்கவிருக்கும் திமுக-வுக்கும், அதன் சட்டமன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்கவிருக்கும் ஐயா ஸ்டாலின் அவர்களுக்கும் எனது உளப்பூர்வமான வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.
