சகோதரி மம்தாவுக்கு வாழ்த்துகள் – பிரதமர் மோடி டுவிட்!

politics
By Nandhini May 05, 2021 10:33 AM GMT
Report

மேற்கு வங்கத்தில் 292 தொகுதிகளுக்குச் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்தது. இதனையடுத்து, மே 2ம் தேதி வாக்குகுகள் எண்ணப்பட்டன. இத்தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றுள்ளது. மம்தா பானர்ஜியின் கட்சி வெற்றி பெற்றாலும், அவர் நந்திகிராமில் சுவேந்து அதிகாரியிடம் தோல்வி அடைந்தார்.

ஆனால் முதலமைச்சராகப் பொறுப்பேற்க எந்தத் தடையும் கிடையாது. இருப்பினும், ஆறு மாதங்களுக்குள் எதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றாக வேண்டும். இல்லையென்றால், முதலமைச்சர் ஆவதில் சிக்கல்தான். நந்திகிராமில் முறைகேடுகள் நடந்துள்ளதாக நீதிமன்றத்தை நாடவிருப்பதாக மம்தா கூறியுள்ளார்.

இந்நிலையில், மேற்கு வங்கத்தில் இன்று 3-வது முறையாக மம்தா முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். அவருக்கு ஆளுநர் ஜெகதீப் தங்கர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இதனையடுத்து, மம்தாவுக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த டுவிட்டர் பக்கத்தில், “மேற்கு வங்க முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள சகோதரி மம்தாவுக்கு வாழ்த்துகள்” என பதிவிட்டுள்ளார்.