வாக்களிக்காத இராயபுரம் மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி – ஜெயக்குமார்!
சட்ட மன்ற பொதுத் தேர்தல் கடந்த ஏப்ரல் 6ம் தேதி நடைபெற்றது. இத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த மே 2ம் தேதி நடைபெற்று முடிந்தது. இத்தேர்தலில் 159 தொகுதிகளில் திமுக அமோக வெற்றி பெற்றுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது திமுக. 75 தொகுதிகளில் அதிமுக ஜெயித்து பலம் வாய்ந்த எதிர்க்கட்சிக்கான அந்தஸ்தை பெற்றுள்ளது. ஆளுங்கட்சியாக இருந்த அதிமுக மிகப்பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. குறிப்பாக 11 அமைச்சர்கள் படுதோல்வி அடைந்திருக்கிறார்கள். அந்த அமைச்சர்களில் ஜெயக்குமார் தோல்வியடைந்தது தான் அனைவருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
திமுக சார்பில் களமிறக்கப்பட்ட திரையரங்கு உரிமையாளர் ஐட்ரீம் மூர்த்தி ராயபுரம் தொகுதிக்குப் புதுமுகம். முதல் முறையாகத் தேர்தலை சந்தித்தார். ஆனால், ஜெயக்குமாரின் 25 ஆண்டு கால அரசியலுக்கு வேகத்தடை போட்டிருக்கிறார் என்றே சொல்லலாம்.
வெற்றியோ,தோல்வியோ எதுவாயினும் நான் எப்போதும் உங்களுடன் இருப்பேன்.. உங்களுடனேயே பயணிப்பேன் வாக்களித்த,வாக்களிக்காத இராயபுரம் மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி! நான் எப்போதும் போலவே என் மக்கள் பணி தொடரும்.நான் எப்போதும் உங்களில் ஒருவன் தான் உங்களுக்கான ஒருவன் தான்.. pic.twitter.com/0VkQR9Rilr
— DJayakumar (@offiofDJ) May 4, 2021
இந்நிலையில், தனக்கு வாக்களிக்காத மக்களுக்கும் நன்றி சொல்லி என்று தனது டுவிட்டர் பக்கத்தில் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில், வெற்றியோ,தோல்வியோ எதுவாயினும் நான் எப்போதும் உங்களுடன் இருப்பேன். உங்களுடனேயே பயணிப்பேன் வாக்களித்த, வாக்களிக்காத இராயபுரம் மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி! நான் எப்போதும் போலவே என் மக்கள் பணி தொடரும்.நான் எப்போதும் உங்களில் ஒருவன் தான் உங்களுக்கான ஒருவன் தான் என்று பதிவிட்டுள்ளார்.