சசிகலா நிலைப்பாடு குறித்து மனம் திறந்த பொங்கலூர் மணிகண்டன்
சசிகலா, எடப்பாடி பழனிசாமியை மனதார பாராட்டுவார் என்று பொங்கலூர் மணிகண்டன் கூறியுள்ளார்.
தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலில் திமுக பெரும்பான்மையுடன் அமோக வெற்றி பெற்றிருக்கிறது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக மீண்டும் ஆட்சிப் பொறுப்பில் அமர்கிறது. திமுகவின் முதல்வர் வேட்பாளராக ஸ்டாலின் களமிறக்கப்பட்டார். 7ம் தேதி மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்க இருக்கிறார்.
இந்தேர்தலில் அதிமுக கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. அதில் அதிமுக 66 தொகுதிகளிலும், பாஜக 4, பாமக 5 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறது. இதனால், அதிமுகவுக்கு எதிர்க்கட்சி என்ற அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதிமுகவில் 27 அமைச்சர்களில் 11 பேர் படுதோல்வி அடைந்துள்ளனர். 16 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
இந்நிலையில், சசிகலா நிலைப்பாடு குறித்து அரசியல் விமர்சகர் பொங்கலூர் மணிகண்டன் பேசியதாவது -
சசிகலாவால் தான் எடப்பாடி பழனிசாமி முதல்வரானார். சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டடை முடித்து சசிகலா சென்னை வந்தார்.

அதிமுகவில் தேர்தல் சமயத்தில் ஏற்பட்ட குழப்பத்தால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்குவதாக அறிவித்தார். எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்றுக்கொண்டு, ஒப்புக்கொண்டு சசிகலா வந்தால் எந்தக் குழப்பமும் இல்லை.
அதிமுகவை மீண்டும் கைப்பற்ற நினைத்தால் கட்சிக்குள் குழப்பம் ஏற்படும். எடப்பாடி எந்த இடத்திலும் சசிகலாவை விமர்சிக்கவில்லை. அதனால் தற்போதுள்ள சூழலில் சசிகலா எடப்பாடி பழனிசாமியை மனதார பாராட்டுவார் என்றார்.