பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர்களாக மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!
politics
By Nandhini
பத்திரிகையாளர்கள் அனைவரும் முன்களப் பணியாளர்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், மக்களாட்சியின் மாண்பிற்கு நான்காவது தூணாய் விளங்குவது ஊடகத் துறைதான். கடும் மழை, கொளுத்தும் வெயில், பெருந்தொற்றிலும் உயிரைப் பணயம் வைத்து ஊடகத் துறையினர் உழைத்து வருகின்றனர்.
எனவே செய்தித்தாள், காட்சி, ஒலி ஊடகங்களில் பணியாற்றுவோர் முன்களப் பணியாளர்களாக கருதப்படுவார்கள். முன்களப் பணியாளர்களுக்கான உரிமைகளும், சலுகைகளும் பத்திரிக்கையாளர்களுக்கும் உரிய முறையில் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
