17வது சுற்றுக்கு பிறகு துரைமுருகன் முன்னிலை– உடன்பிறப்புகள் கொண்டாட்டம்

politics
By Nandhini May 02, 2021 10:12 AM GMT
Report

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணியிலிருந்து தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தற்போதைய நிலவரத்தின்படி திமுக 151 தொகுதிகளிலும், அதிமுக 82 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது. அதிமுக முக்கியப் புள்ளிகள் பலர் பின்னடைவை சந்தித்திருக்கிறார்கள்.அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, விஜய பாஸ்கர், மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோர் பின்னடைவில் உள்ளனர்.

ஆரம்பத்திலிருந்து துரைமுருகன் தபால் வாக்குகள் எண்ணப்பட்டத்திலிருந்தே தொடர்ந்து பின்னடைவில் இருந்தார். அதைத் தொடர்ந்து 17 சுற்றுகளிலும் அவர் பின்னடைவையே சந்தித்தார். இருந்தாலும் இன்னும் 8 சுற்றுகள் இருக்கும் நிலையில், தற்போது துரைமுருகன் முன்னிலை பெற்றுள்ளார். 57 வாக்குகளில் அதிமுக வேட்பாளர் ராமுவை விட துரைமுருகன் முன்னிலை பெற்றுள்ளார்.  

17வது சுற்றுக்கு பிறகு துரைமுருகன் முன்னிலை– உடன்பிறப்புகள் கொண்டாட்டம் | Politics