#முகஸ்டாலின்எனும்நான் என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டிங்
தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தல் கடந்த மாதம் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற்று முடிந்தது. இந்நிலையில், சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணியிலிருந்து தொடர்ந்து எண்ணப்பட்டு வருகிறது. திமுக பெருவாரியான தொகுதிகளை கைப்பற்றி முன்னிலை வகித்து வருகிறது.
இந்நிலையில், ஆட்சி அமைக்க இருப்பது திமுக தான். வெற்றிச் சான்றிதழை வழங்க காலதாமதம் செய்தால் உடனடியாகத் தலைமையைத் தொடர்பு கொள்ளவும். வெற்றி சான்றிதழ் பெறும் வரைக்கும் அனைத்து முகவர்களும் வாக்கு எண்ணும் மையத்தை விட்டு வெளியேறக்கூடாது. தொண்டர்கள் அனைவரும் வெற்றிக் கொண்டாட்டங்களைத் தவிர்க்க வேண்டும் பெருந்தொற்று பரவக் காரணம் ஆகிவிடக் கூடாது. திராவிட முன்னேற்ற கழகத்தின் வரலாற்றில் புதியதொரு அத்தியாயம் தொடங்கி இருக்கிறது. நம்மையும் பாதுகாத்து நாட்டையும் பாதுகாப்போம் என்று அறிக்கை விட்டுள்ளார் மு.க.ஸ்டாலின்.
இதையடுத்து, திமுக ஆட்சிக்கு வந்து ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பேற்க இருப்பதை உறுதிச் செய்யும் விதமாக, மு.க.ஸ்டாலின் எனும் நான்… #முகஸ்டாலின்எனும்நான் என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் தற்போது டிரெண்டாகி வருகிறது.
We all are waiting for the history #முகஸ்டாலின்எனும்நான் pic.twitter.com/VkOoQ6OeFL
— ANGEL RAJAKUMARI.H (@roshinilomesh) May 1, 2021