அசாமில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது பாஜக

Politics
By Nandhini May 02, 2021 07:57 AM GMT
Report

அசாம் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் பகல் 12 மணி நிலவரப்படி ஆளும் பாஜக கூட்டணி 81 தொகுதிகளில் தொடர்ந்து முன்னிலை பெற்றுள்ளது.

அசாம் மாநிலத்தில் மொத்தம் 126 சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன. இங்கு 3 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

இந்தத் தேர்தல் போட்டியில், ஆளும் பாஜக கூட்டணிக்கும், காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே பலத்த போட்டி நிலவியது. இந்நிலையில், சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

பகல் 12 மணி நிலவரப்படி ஆளும்கட்சியான பாஜக பெரும்பான்மைக்கு தேவையான 64 இடங்களை விட, கூடுதல் இடங்களை பெற்று முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கூட்டணி 45 இடங்களை பெற்றுள்ளது.  பாஜக கூட்டணி 81 இடங்களை பெற்று முன்னிலை வகித்து வருகின்றது. 

அசாமில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது பாஜக | Politics