திருச்சி மேற்குத் தொகுதியில் கே.என்.நேரு தொடர்ந்து முன்னிலை
திருச்சி மேற்குத் தொகுதியில் திமுக வேட்பாளர் கே.என்.நேரு தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
தமிழகத்தில் 234 சட்டசபைத் தேர்தல் கடந்த 6ம் தேதி நடந்து முடிந்தது. இதனையடுத்து இன்று காலை 8 மணியிலிருந்து வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
இத்தேர்தலில், அதிமுக, திமுக தலைமையில் ஓர் கூட்டணியும், அமமுக பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் தலைமையில் ஓர் அணியும், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் மற்றொரு அணியும் தேர்தல் களம் இறங்கின. சீமான் தலைமையிலான நாம் தமிழா் கட்சித் தனியாக போட்டியிட்டது. இத்தேர்தலில் 72.81 சதவீத வாக்குகள் தற்போது பதிவாகியுள்ளன.
தேர்தலில் பதிவான வாக்குகள் காலையிலிருந்து தொடர்ந்து எண்ணப்பட்டு வருகிறது. இதில் பெரும்பாலான தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. திருச்சி மேற்குத் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கே.என்.நேரு முன்னிலை வகித்து வருகிறார்.
நான்காவது சுற்று முடிவில், கே.என்.நேரு 16,633 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் பத்மநாபன் 5772 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வினோத் 2417 வாக்குகளும் பெற்றிருக்கிறார்கள்.