கொளத்தூரில் 6 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார்
வில்லிவாக்கம் தொகுதி 2016ம் ஆண்டுக்கு பின்னர் மறு சீரமைப்பு செய்யப்பட்டது. இதனையடுத்து, வில்லிவாக்கம், அம்பத்தூர், கொளத்தூர், திரு.வி.நகர். என்று நான்கு தொகுதிகளாக பிரிக்கப்பட்டது.
2021 சட்டமன்ற பொதுத் தேர்தல் கடந்த மாதம் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற்று முடிந்தது. இன்று காலை 8 மணிக்கு தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் தற்போதைய நிலவரப்படி 12, 664 வாக்குகள் பெற்று 6,592 வாக்கு வித்தியாசத்தில் ஸ்டாலின் முன்னிலையில் வகித்து வருகிறார். அதிமுக சார்பில் போட்டியிட்ட ஆதி ராஜாராம் 6, 072 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். மநீம ஏ.ஜெகதீஸ் 2,011 வாக்குகளும், நாதக பெ.கெமில்ஸ் செல்வா 1627 வாக்குகளும், அமமுக ஜெ.ஆறுமுகம் 141 வாக்குகளும் பெற்றுள்ளனர்.