பொன்.ராதாகிருஷ்ணனை விட 12 ஆயிரம் வாக்குகள் பெற்று விஜய் வசந்த் முன்னிலை!

Politics
By Nandhini May 02, 2021 06:49 AM GMT
Report

தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடந்தது. இதனையடுத்து, மேற்கு வங்கத்தைத் தவிர்த்து மற்ற மாநிலங்களில் கடந்த ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

இதனையடுத்து, கன்னியாகுமரி மக்களவைத் தேர்தல் நடந்தது. காங்கிரஸ் சார்பில் வசந்தகுமார் மகன் வசந்தும், பாஜக சார்பில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் போட்டி களத்தில் இறங்கினர்.

இந்நிலையில், தமிழகத்தில் தற்போது தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இந்தச் சட்டப்பேரவைத் தொகுதிகளில் திமுக முன்னிலை வகித்து வருகிறது. கன்னியாக்குமரி தொகுதியில் விஜய் வசந்த் முன்னிலை வகித்து வருகிறார்.

விஜய் வசந்த் 46 ஆயிரத்து 886 வாக்குகள் பெற்றுள்ளார். பொன். ராதாகிருஷ்ணன் 34 ஆயிரத்து 250 வாக்குகள் பெற்று பின்னடைந்துள்ளார். 12 ஆயிரத்து 636 வாக்கு வித்தியாசத்தில் விஜய் வசந்த் முன்னிலை பெற்றிருக்கிறார்.