5 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலை! எந்தெந்த தொகுதிகள்?

Politics
By Nandhini May 02, 2021 06:34 AM GMT
Report

தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் 5 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் முன்னிலை வகித்து வருகிறது.

இந்நிலையில், துறைமுகம், தாராபுரம், உதகமண்டலம், நாகர்கோவில், திருநெல்வேலி ஆகிய 5 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் முன்னிலை பெற்றுள்ளது. துறைமுகம் தொகுதியில் பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம் 3,142 வாக்குகள் பெற்றுள்ளார்.

இந்நிலையில், திமுக வேட்பாளர் சேகர் பாபு 1702 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்திருக்கிறார். நாகர்கோவில் பாஜக வேட்பாளர் எம்.ஆர் காந்தி 13,831 வாக்குகள் பெற்றிருக்கிறார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் சுரேஷ்ராஜன் 11,483 வாக்குகள் பெற்றிருக்கிறார்.

அதே போல், உதகமண்டலம் தொகுதியில் பாஜக வேட்பாளர் போஜராஜன் 22,406 வாக்குகள் பெற்றுள்ள நிலையில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் கணேஷ் 16,198 வாக்குகள் பெற்றிருக்கிறார். திருநெல்வேலி தொகுதியில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் 10 ஆயிரத்து 43 வாக்குகளை பெற்றுள்ள நிலையில் அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் லக்ஷ்மணன் 6,015 வாக்குகள் பெற்றிருக்கிறார்.