ஒரு தொகுதியில் கூட முன்னிலை இல்லை- கடும் அப்செட்டில் டிடிவி. தினகரன்!
கடந்த ஏப்ரல் 6ம் தேதி தமிழக சட்டசபை பொதுத் தேர்தல் நடந்து முடிந்தது. இந்நிலையில், இன்று காலை 8 மணி முதல் சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. தற்போது வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. ஆரம்பத்திலிருந்து வாக்கு எண்ணிக்கையில் திமுக முதலிடத்தில் வகித்து வருகிறது. இரண்டாம் இடத்தில் அதிமுக உள்ளது.
தற்போதைய நிலவரப்படி திமுக கூட்டணி 128 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 91 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகின்றன. தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் திமுக மற்றும் அதிமுக கூட்டணிக்கு அடுத்து, அதிக கவனத்தை ஈர்த்தது அமமுகவும், அதன் கூட்டணியும் தான்.

தற்போதைய நிலவரப்படி, அமமுக ஒரு தொகுதிகளில் கூட முன்னிலை பெறவே இல்லை. குறிப்பாக, அமமுக தலைவர் தினகரன் போட்டியிட்ட கோவில்பட்டி தொகுதியில் கூட அமமுக முன்னிலை பெறவில்லை. அங்கு அமைச்சர் கடம்பூர் ராஜு தற்போது முன்னிலைப் பெற்று வருகிறார்.
இதனால், ஒரு தொகுதியிலாவது அமமுக வெற்றி பெறுமா என்பதே தற்போது கேள்விக்குறிதான். மேலும், அமமுக கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகளும் எங்கும் முன்னிலை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.