விராலிமலை தொகுதியில் தற்காலிகமாக வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்
அமைச்சர் விஜயபாஸ்கர் விராலிமலை சட்டமன்ற தொகுதியில் வாக்கு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணியிலிருந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
முதல் சுற்றின்போது 14வது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வெளியே குறிப்பிடப்பட்டிருந்த எண்ணில் தவறு இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து, அந்த இயந்திரத்தை எண்ண வேட்பாளர்களின் முகவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
இதனால், குறிப்பிட்ட பெட்டியை பின்னர் எண்ணுவதா? அல்லது இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கையை தொடங்குவதா? என்பது தொடர்பாக அதிகாரிகளுடன், வேட்பாளர்களும், அவர்களது முகவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் வாக்கு எண்ணும் இடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் விராலிமலை சட்டமன்ற தொகுதியில் வாக்கு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னிலை வகித்து வருகிறார்.
