கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசனை பின்னடைய வைத்துள்ளது திமுக கூட்டணி!

politics
By Nandhini May 02, 2021 05:36 AM GMT
Report

கடந்த ஏப்ரல் 6-ம் தேதி தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் நடந்து முடிந்தது. கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு பிறகு இன்று (மே 2) சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்குகள் எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன், டிடிவி தினகரன், சீமான் என ஐந்துமுனை போட்டி நிலவியது. இதை தொடர்ந்து தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக்கணிப்பிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று முடிவுகள் வெளியாயின.

முதல்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. அதன்படி 243 தொகுதிகளில் திமுக கூட்டணி 130 இடங்களிலும், அதிமுக கூட்டணி 130 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் பின்னடைவை சந்தித்திருக்கிறார்.

கோவை தெற்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறார். ம.நீ.ம வேட்பாளர் கமல்ஹாசன் 2வது இடத்திலும், பாஜக வேட்பாளர் 3வது இடத்திலும் பின் தங்கி இருக்கிறார்கள். காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் 4 ஆயிரத்து 409 வாக்குகளும், கமல் ஹாசன் 4 ஆயிரத்து 293 வாக்குகளும், பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் 2900 வாக்குகள் பெற்றிருக்கிறார்கள். 

கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசனை பின்னடைய வைத்துள்ளது திமுக கூட்டணி! | Politics