சைதாப்பேட்டை தொகுதியில் மா.சுப்பிரமணியம் தொடர்ந்து முன்னிலை
சைதாப்பேட்டை தொகுதியில் திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியம் முன்னிலை வகித்து வருகிறார்.
தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற்று முடிந்தது.
இதனையடுத்து, இன்று காலை சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணியிலிருந்து தொடர்ந்து எண்ணப்பட்டு வருகிறது.
தமிழக சட்டமன்றம் பொதுத் தேர்தலில் 3 ஆயிரத்து 998 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இத்தேர்தலில் பதிவான வாக்குகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று எண்ணப்பட்டு வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிந்தன. அதில் திமுக கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது.
அடுத்து வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. அதில் காலை 10.15 நிலவரப்படி திமுக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது. சைதாப்போட்டை தொகுதியில் மா.சுப்பிரமணியம் முன்னிலை வகித்து வருகிறார்.
