வாக்கு எண்ணும் அறையில் அதிமுக– அமமுகவினர் இடையே அடிதடி

politics
By Nandhini May 02, 2021 04:35 AM GMT
Report

தமிழகத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தல் கடந்த மாதம் 6ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. இந்நிலையில், இன்று காலை 8 மணிக்கு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.

கொரோனா காலக்கட்டத்தில் இக்கட்டான சூழலில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது. வாக்கு எண்ணும் மையங்களில் மக்கள் கூட கூடாது, வெற்றிக் கொண்டாட்டங்கள் கூடாது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது.

பதற்றத்தைத் தணிக்கும் வகையில், வாக்கு எண்ணிக்கையை சுமூகமாக கொண்டு செல்லவும் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வந்து கொண்டிருக்கிறது.

இந்த சூழ்நிலையில், களமிறங்கியுள்ள வேட்பாளர்களுக்கு மத்தியிலும், கட்சி தொண்டர்கள் மத்தியிலும் மோதல் போக்கு நீடித்து வருகிறது. விருதுநகர் ஸ்ரீவித்யா கல்லூரியில் தேர்தல் வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. சாத்தூர் சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணும் அறையில் அதிமுகவினருக்கும், அமமுகவினருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.

வாக்கு எண்ணும் அறையில் அதிமுக– அமமுகவினர் இடையே அடிதடி | Politics

சாத்தூர் சட்டமன்ற தொகுதி வாக்கு என்னும் மையத்திற்கு அருப்புக் கோட்டை சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் வைகைச்செல்வன் உள்ளே நுழைந்தார். இதனால், அமமுக முகவர்கள் ஆட்சேபனை தெரிவித்து கூச்சலிட்டனர். இதைத்தொடர்ந்து அதிமுக மற்றும் அமமுகவினருக்கு அடிதடி ஏற்பட்டது. இந்த அடிதடியில் திருமலைராஜன் என்பவருக்கு சட்டை கிழந்தது.

இதைத்தொடர்ந்து தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சியாளர் கண்ணன் சம்பவ இடத்திற்கு வந்து இருவரையும் சமாதானப்படுத்தினார். இதனால் வாக்குப் பதிவு அங்கு நிறுத்தப்பட்டுள்ளது. இரு கட்சியினருக்கிடையில் ஏற்பட்ட மோதலால் அப்பகுதியில் பெரும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.