கருத்துக் கணிப்புகளை யாரும் நம்பாதீங்க- வெற்றி மாலையை சூட தயாராகுங்கள்: ஓபிஎஸ், ஈபிஎஸ்

politics
By Nandhini Apr 30, 2021 10:55 AM GMT
Report

வெற்றி மாலையை சூட தயாராகுங்கள் என்று அதிமுக தொண்டர்களுக்கு ஓபிஎஸ் - ஈபிஎஸ் சேர்ந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் கடந்த ஏப்ரல் 6ம் தேதி நடைபெற்று முடிந்தது. இந்நிலையில், மே 2ம் தேதி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

இதனையடுத்து, அதிமுக தொண்டர்களை உற்சாகப்படுத்தும் விதமாக ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோர் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அந்த அறிக்கையில், கருத்துக் கணிப்புகளை நம்ப வேண்டாம். 2016ல் நடைபெற்ற கருத்துக் கணிப்புக்கு மாறாக அதிமுக ஆட்சி அமைத்தது. அதனால் தொண்டர்கள் சோர்வடையாமல் துணிச்சலுடன் செயல்பட வேண்டும். நமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும். இரட்டை இலையே என்னென்றும் வெல்லும். கடமை அழைக்கிறது கண்மணிகளே வெற்றி மாலையை சூட தயாராகுங்கள் என்று அறிக்கையில் கூறியுள்ளனர். 

கருத்துக் கணிப்புகளை யாரும் நம்பாதீங்க- வெற்றி மாலையை சூட தயாராகுங்கள்: ஓபிஎஸ், ஈபிஎஸ் | Politics