தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை - அமைச்சர் உதயகுமார்

politics
By Nandhini Apr 24, 2021 10:56 AM GMT
Report

தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என திருச்செந்தூரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தமிழக வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார் இன்று காலை சுவாமி தரிசனம் செய்தார். அவர் கோவில் மூலவர் மற்றும் சுவாமி சண்முகரை வழிபாடு செய்தார்.

அதன் பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி அமையும். ஸ்டெர்லைட் விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது. அதுகுறித்து கருத்து சொல்ல முடியாது. தமிழகத்தில் ஆக்சிஜன் மற்றும் தடுப்பூசி பற்றாக்குறை இல்லை. மேலும் தேவையான அளவு இருப்பு உள்ளது. கொரோனா தொற்று காலத்தில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். அடுத்த மாதம் 2-ந் தேதிக்கு பிறகு ஊரடங்கு கடினமாக இருக்காது என்றார். 

தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை - அமைச்சர் உதயகுமார் | Politics