பிரதமர் மோடி, மீண்டும் மீண்டும் டி.வி.யில் தோன்றினால் கொரோனா ஒழிந்து விடாது: சித்தராமையா

politics.
By Nandhini Apr 24, 2021 07:37 AM GMT
Report

இந்தியாவில் கொரோனா பரவிய ஆரம்பக் காலத்திலிருந்தே பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் அடிக்கடி உரையாடி வருகிறார். இப்போது வரை என்ன அறிவிப்பு வெளியிட வேண்டுமென்றாலும் தொலைக்காட்சிகளில் தோன்றி மக்களுக்கு அறிவுரைகளை வழங்குகிறார்.

தற்போது, இதை விமர்சித்து கர்நாடகா முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான சித்தராமையா ஒரு பதிவு ஒன்றை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

பிரதமர் மோடி, மீண்டும் மீண்டும் டி.வி.யில் தோன்றினால் கொரோனா ஒழிந்து விடாது: சித்தராமையா | Politics

அந்த பதிவில், “பிரதமர் நரேந்திர மோடி அவர்களே எந்தக் காரணமும் இல்லாமல் நீங்கள் மீண்டும் மீண்டும் தொலைக்காட்சிகளில் தோன்றினால் கொரோனா வைரஸ் ஒழிந்து விடாது. மாநில முதலமைச்சர்களுக்குப் பாடம் நடத்த நீங்கள் தலைமையாசிரியரும் கிடையாது. மாநிலங்கள் கேட்கும் உதவிகளைச் செய்து உங்களின் பொறுப்பை உணர்த்துங்கள்.

தினந்தினம் பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் இல்லாமல் பலர் இறக்கின்றனர். இதனால் மாநிலங்கள் மோடியிடம் ஆக்சிஜன் வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறார்கள். ஆனால் அவரோ ஆக்சிஜன் பதுக்கல்களை எதிர்த்து நடவடிக்கை எடுங்கள் என மாநில அரசுகளை வலியுறுத்துகிறார். நமது நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவும் பட்சத்தில் எதற்காக வெளிநாடுகளுக்கு அதிகப்படியான ஆக்சிஜனை பிரதமர் ஏற்றுமதி செய்ய வேண்டும்?” என்று பதிவிட்டுள்ளார்.