கொரோனாவிலிருந்து தப்பிக்க அமைச்சர் வேலுமணி கொடுத்த டிப்ஸ்

politics
By Nandhini Apr 24, 2021 07:12 AM GMT
Report

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, அமைச்சர் வேலுமணி அறிவுரை வழங்கியிருக்கிறார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் பயங்கரமாக அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு இரவு நேர ஊரடங்கையும், ஞாயிறு தோறும் முழு ஊரடங்கையும் பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று ஒரேநாளில் 13,776 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. பலி எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனாவுக்கு 13,395 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

இந்நிலையில், அமைச்சர் வேலுமணி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சிறிது மஞ்சள் பொடியை சூடான நீரில் சேர்த்து தினமும் ஆவிபிடித்தல் அவசியம்.

பாலில் கலந்து குடித்தால் / தேனுடன் குழைத்து சாப்பிட்டால் சளி, இருமல் குணமாகும். நம் முன்னோர்கள் கண்ட பாரம்பரிய உணவு முறையை பின்பற்றி நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்வோம். நோய்த்தொற்று எதிரியை வெல்வோம்.” என்று பதிவிட்டுள்ளார்.