கொரோனாவே இல்லாத இந்தியாவை உருவாக்க உதவ வேண்டும்- விஜயகாந்த் கோரிக்கை
கொரோனாவே இல்லாத இந்தியாவை உருவாக்க உதவ வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்தியாவில் கொரோனாவின் 2ம் அலை தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் கொரோனாவின் பிடியில் சிக்கி தவித்து வருகின்றனர். நாளுக்கு நாள் கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசும், மாநில அரசும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இதுகுறித்து, தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆக்ஸிஜன் பற்றாக்குறை மற்றும் தடுப்பூசி பற்றாக்குறையை போக்க, தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, மக்கள் மத்தியில் உள்ள அச்சத்தை நீக்குவது அரசின் கடமை. பொதுமக்களும் மத்திய, மாநில அரசுகளுடன் ஒத்துழைத்து, கொரோனாவே இல்லாத இந்தியாவை உருவாக்க உதவ வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.
ஆக்ஸிஜன் பற்றாக்குறை மற்றும் தடுப்பூசி பற்றாக்குறையை போக்க, தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, மக்கள் மத்தியில் உள்ள அச்சத்தை நீக்குவது அரசின் கடமை.
— Vijayakant (@iVijayakant) April 23, 2021
பொதுமக்களும் மத்திய மாநில அரசுகளுடன் ஒத்துழைத்து, கொரோனாவே இல்லாத இந்தியாவை உருவாக்க உதவ வேண்டும்.#Covid19India #oxygenshortage pic.twitter.com/RG8k4Q5a3X