அலட்சியக் கிருமித் தாக்குதலாலும் இந்தியா அல்லாடிக்கொண்டிருக்கிறது – கமல்ஹாசன் ஆவேசம்!

politics
By Nandhini Apr 22, 2021 08:39 AM GMT
Report

அலட்சியக் கிருமித் தாக்குதலால் இந்தியா அல்லாடிக் கொண்டிருக்கிறது என்று நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் விமர்சனம் செய்துள்ளார்.

தற்போது இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. முதல் அலை கொரோனாவை காட்டிலும், 2ம் அலை கொரோனாவின் வீரியமும், தாக்கமும் இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது.

கொரோனாவின் பிடியில் மக்கள் சிக்கித் தவித்து வருகிறார்கள். அரசியல் வாதிகளும், சினிமா நட்சத்திரங்களும், முக்கிய பிரமுகர்களும் அதிகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

தற்போது, இந்தியாவில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. வட மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா  நோயாளிகள் கொத்து கொத்தாக இறந்து வருகிறார்கள்.

தமிழகத்தில், ஒரே நாளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை தாண்டிச் செல்கிறது. தமிழகத்திலும் தற்போது ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வருகிறது. நிலைமையைச் சமாளிக்க முடியாமல் மத்திய அரசும், மாநில அரசும் திணறி வருகின்றன.

அலட்சியக் கிருமித் தாக்குதலாலும் இந்தியா அல்லாடிக்கொண்டிருக்கிறது – கமல்ஹாசன் ஆவேசம்! | Politics

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், அலட்சியக் கிருமித் தாக்குதலாலும் இந்தியா அல்லாடிக் கொண்டிருக்கிறது. மத்திய அரசின் நிலைப்பாட்டால், தடுப்பூசிகளின் விலை திடுமென உயர்ந்திருக்கிறது. மக்களைக் காப்பது அரசின் பொறுப்பு என நீதிமன்றம் இடித்துச்சொல்லும் நிலைமை பெருமைக்குரியது’ என்று தன்னுடைய கருத்தை பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து மற்றொரு பதிவில், 'பூமியை மீட்போம்' என்கிற கோஷத்தோடு உலக பூமி நாள் அனுஷ்டிக்கப்படுகிறது. இயற்கையைச் சிதைத்தால் விளைவு என்னவாக இருக்கும் என்பதை இக்காலம் 'மாதிரி' காட்டிக்கொண்டிருக்கிறது. தாங்க மாட்டீர்கள் ஜகத்தீரே… இயற்கையைப் பேணி அதன் கொடையால் நாமும் வாழ்வோம் என்று பதிவிட்டுள்ளார்.