ஆக்சிஜன் கசிவால் 22 நோயாளிகள் இறந்த செய்தி கேட்டு துயரமடைந்தேன்- ராகுல் காந்தி

politics
By Nandhini Apr 21, 2021 12:36 PM GMT
Report

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2ம் அலை மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இதனால் கொரோனாவின் பிடியில் மக்கள் சிக்கித் தவித்து வருகிறார்கள். தற்போது பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளக்கு அதிகப்படியான ஆக்சிஜன் தேவைப்படுகிறது.

முதல் அலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை விட தற்போது 54 சதவீதம் பேர் கொரோனாவின் 2ம் அலையில் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் வெளிநாடுகளிலிருந்து ஆக்சிஜன் இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆக்சிஜன் இல்லாமல் ஒவ்வொரு நாளும் ஏராளமான மக்கள் இறந்து வருகிறார்கள்.

இந்நிலையில், மகாராஷ்டிராவில், நாசிக் ஜாகிர் உசேன் மருத்துவமனையில் ஆக்சிஜன் வாயுக்கசிவால் கொரோனா நோயாளிகள் 22 பேர் உயிரிழந்துள்ளனர். டேங்கரிலிருந்து சிலிண்டருக்கு ஆக்சிஜன் மாற்றும் பணி நடைபெற்றபோதும், இந்த அசம்பாவிதம் சம்பவம் நடந்துள்ளது.

ஆக்சிஜன் கசிவால் 22 நோயாளிகள் இறந்த செய்தி கேட்டு துயரமடைந்தேன்- ராகுல் காந்தி | Politics

தற்போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

இது குறித்து ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், “நாசிக்கின் ஜாகிர் உசேன் மருத்துவமனையில் நோயாளிகள் இறந்த செய்தி கேட்டு துயரமடைந்தேன். அவர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்து உதவிகளையும் வழங்குமாறு நான் அரசிடம் கட்சி ஊழியர்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்” என்று பதிவிட்டுள்ளார்.