ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று உறுதி- மு.க.ஸ்டாலின் உருக்கம்

politics
By Nandhini Apr 20, 2021 12:23 PM GMT
Report

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இந்நிலையில், சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் என அனைவரும் கொரோனாவின் பிடியில் சிக்கி வருகின்றனர். அந்த வகையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கும் தற்போது கொரோனா உறுதியாகியுள்ளது.

இது குறித்து, ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், லேசான அறிகுறி இருந்த தனக்கு கொரோனா பாசிட்டிவ் என வந்திருக்கிறது. என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள் என பதிவிட்டுள்ளார். ராகுல் காந்தி விரைவில் குணமடைய நான் பிரார்த்திப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ராகுல் காந்திக்கு கொரோனா உறுதியான செய்திக் கேட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வருத்தம் அடைந்துள்ளார்.

இது குறித்து, தனது டுவிட்டர் பக்கத்தில், இந்திய தேசிய காங்கிரஸின் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சகோதரர் ராகுல் காந்திக்கு கொரோனா பாசிட்டிவ் என கேள்விப்பட்டதில் மிகுந்த கவலை அடைந்தேன். அவர் முழு ஆரோக்கியம் பெற்று விரைவாக குணமடைய விரும்புகிறேன். எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து பாதுகாப்பாக இருக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்ளுங்கள் என்று பதிவிட்டுள்ளார். 

ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று உறுதி- மு.க.ஸ்டாலின் உருக்கம் | Politics