வாக்குப்பதிவு முடிந்த பிறகும் திமுகவுக்கு தேர்தல் பணிகளை செய்து வருகிறதா ஐபேக்?
தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் தேதி அறிவித்தவுடன் அனைத்து கட்சிகளும் மும்முரமாக சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு அனல் தெறிக்கும் பிரச்சாரங்களை நிகழ்த்தியது.
இதில் அதிமுகவுக்கும், திமுகவுக்கும்தான் கடுமையான போட்டி நிலவியது. ஒருவரையொருவர் குற்றம் சுமத்தி பரப்புரையை நிகழ்த்தினர். மழை அடித்து ஓய்ந்தது போல் பிரச்சாரங்களும் ஓய்ந்தது. மக்கள் எதிர்பார்த்த தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற்று முடிந்தது.
இந்நிலையில், திமுகவுக்கு தேர்தல் பணிகள் செய்து வந்த ஐபேக் குழுவினர் ஏப்ரல் 6-ம் தேதி வாக்குப்பதிவுக்கு பின்னர் தனது பணிகளை முடித்துவிட்டு அறிவாலயத்தில் அமைக்கப்பட்டிருந்த தங்களது அலுவலகத்தையும் காலி செய்து விட்டு சென்றனர்.
திமுகவுக்கு தேர்தல் உத்திகளை வகுத்து கொடுப்பதற்காகத்தான் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது என்று முதலில் சொல்லப்பட்டது.

ஆனால், வாக்குப்பதிவு முடிந்த பிறகும் திமுகவுக்கு தேர்தல் பணிகளை செய்து இருக்கிறதாம் ஐபேக். வாக்களித்தவர்களிடம் தனியாக பேசி திமுகவுக்கு தான் ஓட்டு போட்டீர்களா? என்பதை ஐபேக் குழுவினர் உறுதி செய்துள்ளனர்.
அதுமட்டுமில்லாமல் வாக்குப்பதிவு நடந்த இரண்டு தினங்களுக்கு பின்பு சம்பந்தப்பட்டவர்கள் வீடுகளுக்குச் சென்று திமுகவுக்கு தானே ஓட்டு போட்டீர்கள் என்றும் கன்பார்ம் செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.