பழனி முருகன் கோவிலில் திடீரென வழிபாடு நடத்திய அமைச்சர் - காரணம் என்ன?
நாம் அனைவரும் எதிர்பார்த்த தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற்று முடிந்தது. தேர்தல் முடிவுகளுக்காக அனைத்து கட்சிகளும் மே 2ம் தேதியை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று இரவு பழனிக்கு வருகை தந்தார். இன்று அதிகாலை மலைக்கோவிலுக்கு படிப்பாதை வழியாக சென்று சாமி தரிசனம் செய்தார். தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி அடைய பிரார்த்தனை செய்தார். திருஆவினன்குடி கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடத்தினார்.

அதனையடுத்து, படிப்பாதை வழியாக நடந்தே கீழே இறங்கி வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்புதான் தமிழ்வருடப்பிறப்பு அன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு செய்தார்.
அதனைத் தொடர்ந்து இன்று பழனி கோவிலில் அ.தி.மு.க. வெற்றிக்காகவும், மீண்டும் எடப்பாடி பழனிசாமி முதல்வராக வேண்டியும் சிறப்பு பூஜை நடத்தி உள்ளார்.