மயிரிழையிலும் கூட இது நடக்கலாம்? முதல்வர் எடப்பாடிக்கு வந்த ரிப்போர்ட்

politics
By Nandhini Apr 16, 2021 05:34 AM GMT
Report

தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தல் அலை அடித்து ஓய்ந்தது போல்... அனல் தெறிக்க நடைபெற்ற பிரச்சாரம் அனைத்தும் தேர்தல் முடிந்த பிறகு ஓய்ந்தது. இந்நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பல்வேறு தரப்பினரிடமிருந்து முதல்வர் எடப்பாடிக்கு வந்து கொண்டிருக்கிறது. அதை எல்லாம் வைத்து பார்க்கும்போது அதிமுக கூட்டணி 130 இடங்களுக்கு மேல் கிடைத்து வெற்றிவாகை சூடி ஆட்சியை மீண்டும் பிடிக்கும் என்று அதிமுக சீனியர்கள் தெரிவித்துள்ளனர்.

கூட்டணியில் இருக்கும் பாமக நிறுவனர் ராமதாஸ் கூட இதையே தான் சொல்லிக் கொண்டு வருகிறார். முதல்வரையும் உற்சாகப்படுத்தி வருகிறார்.

தேர்தல் ரிப்போர்ட் குறித்து சுனிலிடமும் தீவிர ஆலோசனை நடத்தி உள்ளார் முதல்வர் எடப்பாடி. முதல்வருக்கு தேர்தல் வியூக வகுப்பாளராக இருப்பவர்தான் சுனில். இவரிடம் நடத்திய ஆலோசனையில், முதல்வரிடம் ஒரு ரிப்போர்ட்டை சுனில் கொடுத்துள்ளார்.

அந்த ரிப்போர்ட்டில், அதிமுக கூட்டணிக்கு 90 தொகுதிகள் வரை கிடைக்கும் என்றும், அதல் 100 சதவீதம் உறுதி என்றும், 27 தொகுதிகளில் இழுபறி இருக்கும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த 27 தொகுதியிலும் வெற்றி வித்தியாசம் அல்லது தோல்வி வித்தியாசம், சில ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தான் இருக்க வாய்ப்பு உள்ளது. இந்த 27 தொகுதியிலும் மயிரிழையிலும் கூட வெற்றி, தோல்வி இருக்கும் என்று அவர் கூறியிருக்கிறார். இதனால் அந்த 27 தொகுதிகள் குறித்து முதல்வர் டென்சஷனாக உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.