மே 6ம் தேதி பதவியேற்க தயாராகும் அரங்கமா? நடப்பது என்ன?

Politics
By Nandhini Apr 16, 2021 03:46 AM GMT
Report

தமிழகத்தில் நாம் அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருந்த 2021ம் சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. தேர்தல் ஆணையம் தேர்தல் தேதி அறிவித்த நாளிலிருந்து அனைத்து கட்சிகளும் எப்படியாவது ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்று அனல் தெறிக்க பிரச்சாரத்தை மேற்கொண்டன.

அதில், அதிமுகவும், திமுகவுக்கும் தான் கடுமையான போட்டி நிலவியது. அதிமுகவினரும், திமுகவினரும் ஒருவரையொருவர் மாறி மாறி குற்றம் சாட்டி பிரச்சாரத்தை மேற்கொண்டு வந்தனர். ஒரு வழியாக தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற்று முடிந்தது.

எப்போதுமே தேர்தலுக்கு முன்பு நடத்தப்படும் கருத்து கணிப்புகளை விட தேர்தலுக்கு பிறகு நடத்தப்படும் கருத்துக் கணிப்புகள் தான் பரபரப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தும். ஆனால், 2021ம் ஆண்டு தேர்தலில் அதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளுக்கு 29ம் தேதி வரைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் யார் முதலமைச்சர் ஆவார் என்ற கருத்துக்கணிப்புகளை வெளியிட முடியாத சூழ்நிலை உள்ளது. ஆனால், ஊடகங்கள் தங்கள் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை எடுத்துக்கொண்டுதான் வைத்துள்ளன. ஆனால், வெளியிடவில்லை.

இந்நிலையில் திமுகவுக்கு தேர்தல் பணிகள் செய்துவந்த ஐபேக் பிரசாந்த் கிஷோர், தமிழகத்தில் திமுகவுக்கு எதிரான ஒட்டுமொத்த கட்சிகளுமே 50 இடங்களுக்கு மேல் தாண்டாது.

திமுக கூட்டணி தான் பெரும்பான்மையான எண்ணிக்கையில் வந்து ஆட்சி அமைக்கும் என்று ஆதாரங்களுடன் கூறியுள்ளார். பல்வேறு கருத்துக்கணிப்புகளும் திமுகவுக்கு சாதகமாகவே இருப்பதால் அமைச்சரவைப் பட்டியலை தயார் செய்து வருதாகவும், பதவியேற்பு விழாவுக்கான அரங்கத்தை தயார் செய்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.