கொரோனாவிலிருந்து நாம் விரைவில் மீள கடவுளிடம் பிரார்த்திக்கிறேன் - அமைச்சர் செல்லூர் ராஜூ

politics
By Nandhini Apr 15, 2021 10:15 AM GMT
Report

கொரோனா 2ம் அலையிலிருந்து நாம் அனைவரும் விரைவில் மீள கடவுளிடம் பிரார்த்திக்கிறேன் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். 

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. ஒரே நாளில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் மட்டும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கொரோனா தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை எடுத்து வருகிறது. 

இந்நிலையில், மதுரையில் செய்தியாளர்களிடம் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில், முதல்வரின் கோரிக்கையை ஏற்று மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டு வருகிறார்கள். இது தமிழக முதல்வருக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.

கொரோனா இரண்டாம் அலையிலிருந்து நாம் அனைவரும் விரைவில் மீள நான் கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன். தமிழகத்தில் முதல்வரின் நல்லாட்சி அமைந்திட வேண்டும். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. தமிழக முதல்வர் எடப்பாடியின் ஆட்சி மீண்டும் அமையும் என நான் நம்புகிறோம் என தெரிவித்தார்.  

கொரோனாவிலிருந்து நாம் விரைவில் மீள கடவுளிடம் பிரார்த்திக்கிறேன் - அமைச்சர் செல்லூர் ராஜூ | Politics