அரசியல் வாதிகளுக்கு தேர்வு நடத்தினால் தேர்ச்சி பெறுவார்களா?: சீமான் எழுப்பியக் கேள்வி

student seeman exam politician pass
By Jon Mar 28, 2021 02:52 AM GMT
Report

மாணவர்களுக்கு தகுதி தேர்வுகள் இருப்பதுபோல் அரசியல்வாதிகளுக்கு தங்கள் பதவிக்காக தகுதி தேர்வு வைத்தால் எத்தனை பேர் தகுதி பெறுவார்கள் என சீமான் கேள்வி எழுப்பினார். தேர்தல் களம் சூடு பிடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அனைத்து கட்சித் தலைவர்களும் வேட்பாளர்களும் மக்களிடையே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக இன்று ஒரத்தநாடு பகுதியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரத்தநாடு தொகுதி வேட்பாளர் கந்தசாமியை ஆதரித்து மக்களிடையே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது பேசியதாவது, "திராவிட கட்சிகள் அனைத்தும் தமிழ்நாட்டை சுடுகாடக மாற்றிவிட்டது .

பள்ளி மாணவர்கள் முதல் பட்டம் பெறும் பட்டதாரிகள் வரை அனைவருக்கும் தகுதி தேர்வுகள் இருக்கும் நிலையில் அரசியல்வாதிகள் தங்கள் பதவிக்கு எதுவும் தகுதி தேர்வு எழுதுகிறார்களா?. அப்படி எழுதும் தருவாயில் எத்தனை அரசியல்வாதிகள் தேர்ச்சி பெறுவார்களா?என்று வினா எழுப்பினார் மேலும் நீட் தேர்வை முழுவதுமாக எதிர்க்கும் திமுக தலைவர் ஸ்டாலின் அனிதா பெயரில் நீட் தேர்வுக்கு பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என்று கூறுவது நகைச்சுவையாக உள்ளது என்றார்.

மேலும் நாம் தமிழர் ஆட்சியில் நீட் தேர்வு என்று ஒன்று அறவே இருக்காது என்று உறுதி கூறினார் மக்களுக்கான உரிமை பிரச்சனை போராட்டங்கள் என்றால் நினைவில் வருவது சீமான் ஆனால் ஓட்டு திராவிட கட்சிகளுக்கு என்று மக்கள் மீது வருத்தம் தெரிவித்தார்.

உங்களுக்காக பேச இந்த உலகில் ஒருவன் இருக்கிறான் என்றால் அது நான் மட்டும் தான் என்றும் மேலும் நாம் தமிழர் ஆட்சி காலத்தில் வேளாண் சார்ந்த அனைத்து தொழில்கள் அரசு வேலையாக மாற்றப்படும் என்றும் வேளாண் சார்ந்த தொழிற்சாலைகள் தமிழகம் முழுவதும் அமைக்கப்படும் அவற்றில் படித்தவர் படிக்காதவர் என்று அனைவருக்கும் வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும். தமிழகத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் முற்றிலும் ஒழிக்கப்படும்" என்று வாக்குறுதிகளை கூறி மக்களிடையே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.