செங்கரடி என நினைத்து மனிதரை சுட்டுக்கொன்ற அரசியல்வாதி
ரஷ்யாவில் செங்கரடி என நினைத்து மனிதர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்திலுள்ள ஒசேர்நோவ்ஸ்கை எனும் கிராமத்தில் அதிபர் விளாடிமிர் புதினின் ஐக்கிய ரஷ்யக் கட்சியைச் சேர்ந்த ஈகோர் என்ற தொழிலதிபர் வசித்து வருகிறார்.
இவர் அங்குள்ள குப்பை மேட்டில் செங்கரடி ஒன்று இருப்பதாக கேள்விப்பட்டு அதனை அச்சுறுத்த அந்த குப்பை மீது துப்பாக்கியால் சுட்டுள்ளார். ஆனால் துப்பாக்கியில் இருந்து பாய்ந்த குண்டு அங்குள்ள உள்ளூர் மக்கள் ஒருவர் மீது பாய்ந்தது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ரஷ்யாவில் உள்ள மிகவும் பணக்கார அரசியல்வாதிகளில் ஒருவராக அறியப்படும் அவரை போலீசார் கைது செய்த நிலையில் புதினின் கட்சியில் இருந்து ஈகோர் விலகியுள்ளார்.