கமலா என பெயர் வைத்திருந்தாலே இலவசம்

america vice president usa
By Jon Jan 25, 2021 12:35 PM GMT
Report

அமெரிக்கா துணை அதிபரான கமலா ஹாரிஸ் அவர்களை பெருமைப்படுத்தும் வகையில் வகையில் இந்தியாவில் ஒரு நிகழ்வு நடந்துள்ளது. அமெரிக்க துணை அதிபராக கமலா ஹாரிஸ் (56) சமீபத்தில் பதவியேற்றார். துணை அதிபராக பதவி ஏற்ற முதல் கருப்பின ஆசிய - அமெரிக்க பெண் என்ற பெருமையை கமலா பெற்றுள்ளார்.

இதனை கொண்டாடும் வகையில், கொச்சி, பெங்களூரு, ஐதராபாத் நகரங்களில் செயல்படும் வொண்டர்லா தீம் பார்க்கனாது, தனது பேஸ்புக் பக்கத்தில், இந்த ஞாயிறு, கமலாக்களின் வெற்றி என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், நாளை பூங்காவிற்கு வருபவர்களில் கமலா என பெயர் வைத்தால் அவர்களுக்கு இலவசமாக நுழைவுச்சீட்டு வழங்கப்படும் எனவும், முதலில் வரும் 100 பேருக்கு மட்டுமே இந்த சலுகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

கமல், கமலா, கமலம் என்ற பெயர்களில் வருபவர்களுக்கும் இலவச நுழைவு சீட்டு வழங்கப்படும் என தெரிவித்துள்ள பூங்கா, இதற்கு அடையாள அட்டை அவசியம் எனவும், மற்ற பெயர் உள்ளவர்களுக்கு இந்த சலுகை பொருந்தாது என தெரிவித்துள்ளது.