”அரசியலை விட்டே விலகத் தயார்” துணிச்சலாக சவால்விட்ட அரசியல்வாதி யார்?

dmk politician ntk mnm aiadmk
By Jon Apr 02, 2021 05:06 PM GMT
Report

தமிழக சட்டமன்ற தேர்தல் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. அரசியல் கட்சிகள் பரபரப்பான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக - அதிமுக 130க்கும் மேற்பட்ட இடங்களில் நேரடியாக மோதுகின்றன. அதில் பல தொகுதிகள் இரு கட்சிகளும் வலுவான வேட்பாளர்கள் போட்டியிடுவதால் நட்சத்திர தொகுதியாக மாறியுள்ளது.

அதில் சென்னை சைதாப்பேட்டையும் ஒன்று. அதிமுக சார்பில் சைதை துரைசாமி, திமுக சார்பில் மா.சுப்ரமணியன் போட்டியிடுகின்றனர். இருவ்ருமே முன்னாள் சென்னை மேயர்களாக இருந்தவர்கள் என்பது சுவாரஸ்யமான விஷயம். இந்நிலையில் மா.சுப்ரமணியன் திமுக தேர்தல் பணிமனையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், ”என்னுடைய நண்பர் ஜம்புலிங்கம் 2 லட்சம் ரூபாய்க்கு எனக்கு வீடு வாங்கி தந்தார். 1996 முதல் அந்த வீட்டில் நான் குடியிருக்கிறேன். மேயர் தேர்தலில் நான் தாக்கல் செய்த பிரமாண பாத்திரத்தில் கூறியுள்ளேன் நான் தங்கியிருக்கும் வீட்டு மேற்கூரை மட்டுமே எனக்கு சொந்தம், இடம் சிட்கோவுக்கு சொந்தம் என அதில் நான் குறிப்பிட்டுள்ளேன்.

சிட்கோ நிலத்தை நான் அபகரித்து விட்டேன் என கூறி வருகின்றனர். சாதாரண 1100 சதுர அடி நிலத்தில் குடியிருக்கும் என் மீது சைதை துரைசாமி குற்றம் சாட்டுகிறார்.

  ”அரசியலை விட்டே விலகத் தயார்” துணிச்சலாக சவால்விட்ட அரசியல்வாதி யார்? | Politician Bravely Challenged Ready Politics

நான் பொய்யான ஆவணங்களை வழங்கி எனது மனைவி பெயரில் நிலம் வாங்கியதாக சைதை துரைசாமி நிரூபித்தால் அரசியலில் இருந்து நான் விலகி விடுக்கிறேன். என்மீதான நில அபகரிப்பு வழக்கிற்கு முறையான ஆதாரம் வழங்க முடியவில்லை என்பதால் என் மீது கலங்கம் விளைவிக்க பார்க்கிறார். மேலும், மே 2-ம் தேதிக்குப் பிறகு சைதை துரைசாமி அரசியலிலிருந்து விலகி விடுவார்.

அவரை குறுக்கு வழியில் தோற்கடிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. சைதை துரைசாமியுடன் விவாதத்திற்கு நான் தயார், இரண்டு நாட்களுக்குள் துரைசாமி இதனை நிரூபிக்க வேண்டும். என் மீதான குற்றச்சாட்டை நீருப்பித்தால் அரசியலை விட்டே விலக தயார்.

அப்படி குற்றச்சாட்டை நிரூப்பிக்க தவறினார் தவறினால் சைதை துரை சாமி தேர்தலிலிருந்து விலக தயாரா? 2015 ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தின் போது மேயராக இருந்தவர் சைதை துரைசாமி. சென்னை பெரு வெள்ளம் குறித்து நிருபர்கள் கேள்வியெழுப்பிய போது பதிலளிக்காமல் சென்றவர் சைதை.துரைசாமி.

சைதை துரைசாமி மீது 10-க்கும் மேற்பட்ட நில அபகரிப்பு வழக்கு உள்ளது. சைதை வரலாற்றில் அதிகபட்ச வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். மே 2-ம் தேதிக்குப் பிறகு சைதை துரைசாமி மீது உள்ள நில அபகரிப்பு வழக்கை சட்டபூர்வமாக கொண்டு செல்வேன். தேர்தலில் தோற்றால் காரணம் கூறுவதற்கு சைதை துரைசாமி என் மீது குற்றச்சாட்டு வைத்து வருகிறார்” என மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.