கோவை : வாக்கு என்னும் மையத்தில் வேட்பாளர்கள் திடீர் போராட்டம்
கோவை வாக்கு என்னும் மையத்தில் திடீர் போராட்டம்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 19-ம் தேதி நடைபெற்று முடிந்தது.
இந்நிலையில் 21 மாநகராட்சி , 489 பேரூராட்சி மற்றும் 138 நகராட்சிகளில் பெரும்பாலான இடங்களில் காலை முதலே திமுக முன்னிலை வகித்து வருகிறது.
இந்நிலையில் கோவை 32வது வார்டு ஜி.சி.டி வாக்கு மையத்தின் உள்ளே அமர்ந்து வேட்பாளர்கள் திடீர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
வாக்கு மின்னணு இயந்திரத்தில் சீல் வைக்கப்பட்ட அட்டையில் தாங்கள் போடப்பட்ட கையெழுத்து எதுவுமே இல்லை என கோவை மாநகராட்சி 32வது வார்டில் போட்டியிட்ட
பாஜக , அதிமுக, நாம் தமிழர் கட்சி, சுயேச்சை உள்ளிட்ட வேட்பாளர்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் அப்புறப்படுத்தி வெளியேற்றினர்.
இதனால் வாக்கு என்னும் மையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது..