கொரோனா தடுப்பு விதிகளை அரசியல் கட்சிகளும் கடைபிடிக்க வேண்டும்: சென்னை உயர்நீதி மன்றம்
கொரோனா பரவல் தடுப்பு விதிகளை அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் உறுதிபடுத்த வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் அறிவுத்தியுள்ளது. தற்போது தமிழ்கத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது இதன் காரணமாக தேர்தல் பிரச்சாரங்களை தடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி ஜலாலுதின் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கொரோனா பரவல் அதிகமாகவுள்ளது என்பதில் மாற்று கருத்தில்லை. ஆனால் தேர்தல் அறிவிக்கப்பட்டு நடைமுறைகள் தொடங்கிவிட்டதால் தற்போதைய நிலையில் தலையிட முடியாது என கூறிய நீதிபதிகள்.
மேலும், மக்கள் கூடும் பிரச்சார கூட்டங்களில் தனி மனித இடைவெளி, முகக்கவசம் போன்ற விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு கூறினர்.