IBC தமிழ்: இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி - அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்பு!
IBC தமிழ் நிறுவனம் சார்பாக இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது.
IBC தமிழ்
சென்னை அண்ணாநகர் palmshore ஹோட்டலில் IBC தமிழ் நிறுவனம் சார்பாக இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இந்நிகழ்வில் அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும், அரசியல் பிரமுகர்கள், திரை பிரபலங்கள், யூட்யூப் சேனல் பிரபலங்கள் என பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
அரசியல் கட்சி தலைவர்கள்
இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில செயலாளர்கள் பல்லாவரம் ஷஃபி, நாகை முபாரக், நெய்வேலி இப்ராஹீம், மாநில துணைச்செயலாளர் அஸாருதீன், வழக்கறிஞர் அணி செயலாளர் அமீன், துணைச்செயலாளர் ஸ்வாதீஷ் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
மேலும், மனித நேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சி பொதுச்செயலாளர், SDPI கட்சி நிர்வாகிகள், தமிழ்நாடு பாஜக மாநில செயலாளர் வினோஜ், திமுக துணை செய்தி தொடர்பாளர் செய்யது ஹபீஸ், அதிமுக ஜவஹர் அலி, நாம் தமிழர் ஃபாத்திமா பர்ஷானா உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.